
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர்.
இன்று அதிகாலை குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இரண்டு வாகனங்களை வழி மறித்த போது சாரதியும், ஏனைய நபர்களும் வாகனத்தை வீதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த வாகனத்தில் இருந்த பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றபட்ட முதிரை குற்றிகளை வனவளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.