Home தாயக செய்திகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கருத முடியாது: க.வி.விக்னேஸ்வரன்

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கருத முடியாது: க.வி.விக்னேஸ்வரன்

103
0

தமிழ் மக்கள் கள்ளத் தோணியில் வந்தவர்களும் அல்ல, விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் சிங்களத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

  • ஆம். தமிழ் தான் முதல்மொழி
  • மகாவம்சத்தில் சொல்லப்படுபவை நிரூபிக்கக்கூடியவை அல்ல.
  • விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்.
  • முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர்.
  • பிரபாகரனுக்கு மக்களை பலிக்கடாக்களாக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.
  • 80 வயதான நான் இன்றோ நாளையோ சாவை எதிர்பார்த்திருப்பவன்.
  • உண்மையை உரக்க கூற நான் அஞ்சப்போவதில்லை.

இவ்வாறு பல்வேறு துணிச்சலான பதில்களை ‘டெரன’ செய்தியாளருடனான நேர்காணலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் அளித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

ஊடகவியாளர் : பாராளுமன்றத்தில் கன்னி உரையிலேயே உங்களுக்கு என்னநடந்தது?

விக்னேஸ்வரன் : எம்.பிக்கள் அதனை கேட்டு குழப்பமடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தெளிவொன்று இருந்தமையினாலேயே நான் அதனை கூறினேன்.

ஊடகவியலாளர் : தமிழ்மொழியை இலங்கையின் முதல் மொழியாக தெரிவித்துள்ளீர்கள்.

விக்னேஸ்வரன் : அதுதான் உண்மை.

ஊடகவியலாளர் : அதற்கானஅடிப்படைஆதாரம்என்ன?

விக்னேஸ்வரன் : கலாநிதி பத்மநாதனை சந்தித்த போது இப்போது வேண்டியளவுக்கு சாட்சிகள் உள்ளன. 3000 வருடங்களுக்கும் மேலான காலங்கள் தமிழ் மொழி இலங்கையில் பயன்படுத்தப்பட்டமைக்கு சாட்சிகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதன்படியே நான் அவ்வாறு கூறினேன்.

ஊடகவியலாளர்: இலங்கையில் நாகரிகம் அல்லது குடியேற்றங்கள் விஜயனின் வருகையுடனேயே உருவாகின்றது.

விக்னேஸ்வரன் : அது மகா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் வரலாற்றில் நிரூபிக்கக் கூடியவை என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

ஊடகவியலாளர்: நீங்கள் வடக்கின் முதலமைச்சராக இருந்தபோது வடக்குமக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள்.

விக்னேஸ்வரன்: வேண்டியளவுக்கு செய்துள்ளோம். உங்களுக்கு பத்திரிகைகளில் இருக்கும் விடயங்களே உங்களுக்கு தெரியும்.

ஊடகவியலாளர் : கடந்த 5 வருடங்களிலும் வடக்குமாகாணசபைக்காக ஒதுக்கப்பட்டிருந்த பெருமளவு நிதி மீண்டும் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை ஏன் மக்களுக்காக பயன்படுத்தவில்லை.

விக்னேஸ்வரன் : அவற்றை அரசாங்க முகவர்களின் ஊடாகவே செய்ய வேண்டும். அதனை அவர்கள் செய்வதில்லை. அந்த அரசாங்க முகவர்களே நிதியை திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஊடகவியலாளர் : விடுதலைப்புலிகள் அமைப்பை நீங்கள் எப்படிபார்க்கின்றீர்கள்.

விக்னேஸ்வரன் : நீங்கள் பார்ப்பதை போன்று பயங்கரவாதிகள் என்று யாரையும் கூறுவதில்லை. அவர்கள் தமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளால் யுத்தத்திற்கு இறங்கினர். அதற்கு காரணம் இலங்கை அரசாங்கமே ஆகும்.

ஊடகவியலாளர்: உலகநாடுகள் இதனை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்வதில்லை.

விக்னேஸ்வரன் : அரசாங்கம் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அதனை கேட்பவரை பயங்கரவாதி என்று கூறுகின்றனர். அது எப்படி சரியாகும்.

ஊடகவியலாளர்: ஆனால் அவர்கள் மனிதகொலைகளை செய்தமை மற்றும் அப்பாவிகளை கொலை செய்தமையை ஏற்றுக்கொள்ள முடியுமா?

விக்னேஸ்வரன் : இவர்கள் வடக்கில் அப்பாவிகளை கொலை செய்ததை சரியென கூறலாமா?

ஊடகவியலாளர்: இராணுவத்தினர் விடுதலைப்புலி உறுப்பினர்களை தவிர அப்பாவிமக்களை கொலை செய்தார்களா?

விக்னேஸ்வரன் : 2009 மே 18ஆம் திகதி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் அப்பாவி மக்களே. அவர்கள் அப்படியே முள்ளிவாய்க்காலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் : அவர்களை அவ்வாறு அழைத்துவந்தது பிரபாகரனா? இராணுவமா? பிரபாகரன் அவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்காலம்.

விக்னேஸ்வரன் : அவருக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லையே.

ஊடகவியலாளர்: நீங்கள் கூறுவதை பார்த்தால் பிரபாகரன் ஒருகுழந்தை அவருக்கு ஒன்றும் தெரியாது. மக்களை பாதுகாக்க அங்கு சென்றிருந்தார். என்றுதான் எங்களுக்கு தோன்றுகின்றது.

விக்னேஸ்வரன் : இல்லை , இல்லை 30 வருடங்களாக அரசாங்கத்திற்கு எதிராக போராடியவரை குழந்தையாக நான் கூறுவதில்லை.

ஊடகவியலாளர்: நீங்கள் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகளின் மயானத்தில் சத்தியப்பிரமானம் செய்தீர்கள்.

விக்னேஸ்வரன் : அந்த இடத்திற்கு சென்று அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கடமை எங்களுக்கு உள்ளது.

ஊடகவியலாளர்: நாட்டின் சட்டத்திற்கமைய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஏதேனும் வகையில் ஒத்துழைப்புவழங்கும் எதனையும் செய்யமுடியாது.

விக்னேஸ்வரன் : எப்படி என்று சொல்லுங்கள் பார்ப்போம். இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என்று யார் சொன்னது. இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று சிங்கத்தில் எழுதப்பட்டுள்ளதா?

ஊடகவியலாளர் : நீங்கள் வடக்கில் புத்தர்சிலைகளை வைக்கக்கூடாது என்று கூறியுள்ளீர்களே.

விக்னேஸ்வரன் : பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில் இவற்றை வைக்க என்ன காரணம் என்றே நான் கூறியிருந்தேன்.

ஊடகவியலாளர் : அதனூடாக உங்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்படுகின்றனவா?
விக்னேஸ்வரன் : ஆம் குறைகள் ஏற்படுகின்றன. சிங்கள மக்களை அவ்விடத்திற்கு கொண்டு வர செய்யப்படுகின்றன.

ஊடகவியலாளர்: வாழ்வதற்காக வடக்கிற்கு சிங்களமக்கள் வருவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

விக்னேஸ்வரன் : அரசாங்கத்தினால் அவ்விடங்களில் பலவந்தமாக குடியமர்த்த முயற்சிக்கின்றனர்.

ஊடகவியலாளர் : வடக்கில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பது தவறா?

விக்னேஸ்வரன் : இராணுவத்தினர் இருப்பதால் தான் இவர்கள் அங்கு வருகின்றனர்.

ஊடகவியலாளர்: உங்களின் இரண்டு பிள்ளைகளும் சிங்கள பெண்களையே திருமணம் முடித்துள்ளனர். உங்களின் பிள்ளைகளை கொழும்புபாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். இல்லாவிட்டால் வெளிநாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்றீர்கள்.

விக்னேஸ்வரன் : நீங்கள் கூறும் விடயங்கள் நான் அரசியலுக்கு வர முன்னர் நடந்தவையே. அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினையை நாங்கள் உங்களுக்கு கூறும் போது அது உங்களுக்கு இனவாதமாக தெரிகின்றது.

ஊடகவியலாளர் : நீங்கள் அவ்வாறுதானே கூறுகின்றீர்கள்.

விக்னேஸ்வரன் : அப்படியென்றால், என்னை வாயை மூடிக் கொண்டு இருக்கவா சொல்கின்றீர்கள். நான் என்ன செய்ய. கூறுவதற்கு வேறு முறைகள் இருந்தால் சொல்லுங்கள்.

80 வயதான நான் இன்றோ நாளையோ சாவை எதிர்பார்த்திருப்பவன். உண்மையை உரக்க கூற நான் அஞ்சப்போவதில்லை. முள்ளிவாய்க்காலில் யுத்த சூனிய வலயம் என அறிவித்துவிட்டு , குண்டுகள் போட்டு கொன்றொழிக்கப்பட்டது அப்பாவி தமிழ் பொதுமக்களே.

எனது வாக்குகளுக்காக நான் பணமோ , சாராயமோ யாருக்கும் கொடுக்கவில்லை. அபிவிருத்தி வேண்டும் என்பதற்காக , தமிழரின் அரசியற் பிரச்சனையை புறந்தள்ள முடியாது. என துணீகரமாக பதிலளித்துள்ளார்.