Home உலக செய்திகள் லண்டனில் பரபரப்பு – இரு போர் விமானங்களின் உதவியுடன் தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்!

லண்டனில் பரபரப்பு – இரு போர் விமானங்களின் உதவியுடன் தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்!

38
0

வியன்னாவிலிருந்து லண்டன் திரும்பும் விமானம் ஒன்றின் கழிவறையில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் கிடப்பதாக பைலட் இங்கிலாந்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல கொடுத்ததை அடுத்தே இரண்டு போர் விமானங்கள் உடனடியா விரைந்து பயணிகள் விமானத்தை பத்திரமாக ஸ்டான்ஸ்ரட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அந்த போர் விமானங்கள், இரு முறை விமான நிலையத்தை வட்டமிட்டன. இதனால் ஸ்டான்ஸ்ரட் விமாமன நிலையத்தி நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 7.20 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் வழக்கமாக நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்தப்படாமல் ஒரு ஓரமாக கொண்டு நிறுத்தப்பட்டது.

விமானம் தரையைத் தொட்டதும் ஆயுதம் தாங்கிய போலீசார் விமானத்தை சூழ்ந்துகொண்டனர்.

சிறிது நேரத்தில் விமானத்திற்குள் நுழைந்த பொலிசார் குவைத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தீவிரவாத பிரிவின் கீழ் அந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக கருதப்படும் நிலையில், மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.