Home தாயக செய்திகள் யாழ்-பல்கலையின் புதிய துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா கடமைகளைன் பொறுப்பேற்றார்:

யாழ்-பல்கலையின் புதிய துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா கடமைகளைன் பொறுப்பேற்றார்:

176
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (28/08) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் என அனைவருமாக ஒன்றாக பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்களை துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

ஜநாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்களை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கான துணைவேந்தராக தெரிவு செய்திருந்த நிலையிலேயே பேராசிரியர் சிறிசற்குணராஜா இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

வியத்கம புத்திஜீவிகள் அமைப்பின் யாழ்ப்பாண கலந்துரையாடலிலும் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்கள் முன்னர் கலந்துகொண்டவர் என்பது குற்ப்பிடத்தக்கது.