Home செய்திகள் பயணிகளே அவதானம் – முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

பயணிகளே அவதானம் – முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

59
0

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாமல் கடமையில் ஈடுபடும் பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்காக திடீர் சுற்றி வளைப்புக்களும், சோதனைகளும் இடம்பெறவுள்ளதாகவும், இந்த சுற்றிவளைப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பேருந்து ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்டத்திட்டங்கள் இதுவரையில் செயற்படுத்தப்படுவதில்லை என கூறப்பட்டுவரும் நிலையிலேயே இந்த சட்டத்தை மீளவும் அமுல் படுத்தி இறுக்கமான நடவடிக்கைகளை மெற்கொள்ளப் போவதாகவும், தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து சபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.