Home தாயக செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்திய சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்திய சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டது.

132
0

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது குறித்து ஆராய்வதாக குறித்த தினமே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே தற்போது சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20 ஆம் திகதி ஆற்றிய கன்னி உரையில்… “உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். என தனது உரையை ஆரம்பித்திருன்தார். இதுவே சர்ச்சைக்குரியதாக உருவெடுத்து பெரும் சலசலப்பை சிங்கள பெளத்த பேரினவாதிகள் மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.