Home தாயக செய்திகள் க.வி.விக்னேஸ்வரனின் முதல் பாராளுமன்ற உரை – அச்சமடைந்த சிங்களம்!

க.வி.விக்னேஸ்வரனின் முதல் பாராளுமன்ற உரை – அச்சமடைந்த சிங்களம்!

33
0

நாட்டை பிளவுபடுத்துவதை ஊக்குவிக்கும் விதமான கருத்தை விக்னேஸ்வரன் எம்பி வெளியிட்டார் என குற்றம்சாட்டியுள்ளதுடன் அவரது உரையின் ஒரு பகுதியை நாடாளுமன்ற ஹன்சட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி மனுச நாணயக்கார இன்று (21) சபாநாயகரை கோரியுள்ளார்.

நாட்டின் உச்ச நீதிபதியாகவும், வடமாகாண சபையின் முதலாவது முதலமைச்சராகவும், முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவி செய்யப்பட்டுள்ளவருமான க.வி.விக்னேஸ்வரன் “தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும்” என்று நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதை சிங்களத்தில் கல கல டே பல பல வே என்றும் குறிப்பிட்ட அவர் அதற்கு உதாரணமாக பெரும்பான்மை பலத்துடன் நாட்டை ஆட்சி செய்ய வந்த யானை அணி தற்போது உடைந்து சிதறி தனி ஒரு யானை ஆக நிற்பது கண்கூடு. என்றும் சுட்டிக்காட்டினார்.