Home செய்திகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம்:

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம்:

61
0

இலங்கையின் – வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக  சுகாதார நடைமுறைக்கு ஏற்றவாறு கொடியேற்றம் நிகழ்வு இன்றைய தினம் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அடியார்கள் புடைசூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எனினும் ஆலயத்தில் அன்னதானம் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னரே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும் இன்றைய கொடியேற்ற நிகழ்வு அதிகளவான பக்தர்களுட்அன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.