Home செய்திகள் விபத்துக்களை ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த கோரிக்கை:

விபத்துக்களை ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த கோரிக்கை:

41
0

நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டு வருவதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இவ் விடயம் தொடர்பில் நகரசபை மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா – இலுப்பையடி, புகையிரத நிலைய வீதி, கொரவப்பொத்தான வீதி போன்றவற்றில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால் மக்கள் வீதியால் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள் மக்கள் நடமாட்டம் கூடிய இடத்தில் இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபடுவதால் விபத்துக்களும் சம்பவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறுமியொருவர் விபத்தில் பலியாகியிருந்த நிலையில் இதுவரை நகரசபையால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நடை பாதையை ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தொகையும் அதிகரித்து  செல்lஉம் நிலையிலேயே சமூக ஆர்வலர்களால் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.