Home தாயக செய்திகள் கொலை வழக்கில் சிறையில் உள்ள பிள்ளையானுக்கு பாராளுமன்றில் கலந்துகொள்ள நீதிமன்றம் அனுமதி!

கொலை வழக்கில் சிறையில் உள்ள பிள்ளையானுக்கு பாராளுமன்றில் கலந்துகொள்ள நீதிமன்றம் அனுமதி!

48
0

நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள புதிய பாராளுமன்றத்தில் முதலாவது அமர்வில் கலந்துகொள்வதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விளக்க மறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் அரசங்கத்தின் ஆதரவுடன் இம்முறை பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார்.

இதற்கமைய அவருக்கு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நீதிமன்றத்தினூடாக அனுமதி கோரப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய தினம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது நீதிமன்று.