Home செய்திகள் முல்லையில் – பாரிய போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்!

முல்லையில் – பாரிய போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்!

71
0

முல்லைத்தீவில் வைத்தியர் பற்றாக்குறை உட்பட்ட பல குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி பாரிய மக்கள் போராட்டம் ஒன்று சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.

மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்று வரும் குறித்த போராட்டத்தில் வடமாகாண அரசியல் வாதிகள் சிலர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பல்வேறு வகையிலும் பின் தங்கி காணப்படும் தமது மாவட்டத்தில் முக்கிய பிரச்சனையாக காணப்படும் வைத்திய வசதி, மற்றும் வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை வழங்கக் கோரியே இப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

தமக்கான உரிய தீர்வு வழங்கப்படும் வரையில் தாம் இப் போரட்டத்தை கிஅவிடப் போவதில்லை எனவும், சுழற்சி முறையில் இப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் எனவும் போராட்டத்தில் ஏடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.