Home தாயக செய்திகள் முன்னணியை முற்றுகையிட தயாராகும் மணிவண்ணன் ஆதரவாளர்கள்!

முன்னணியை முற்றுகையிட தயாராகும் மணிவண்ணன் ஆதரவாளர்கள்!

177
0

தமது நம்பிக்கைக்குரிய மணிவண்ணனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக அக் கட்சியின் மணிவண்ணன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும், பேச்சாளர் பொறுப்பில் இருந்தும் மணிவண்ணன் நீக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது ஆதரவாளர்கள் நேற்றைய தினம் (16/08) மணிவண்ணன் வீட்டில் கூடினர்.

யாழ் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த உங்களை (மணிவண்ணனை) வைத்து தேர்தலில் வெற்றியீட்டி விட்டு தற்போது அவரை நீக்க முனைவது ஏற்றுக் கொள்ள முடியாது. இது மிகப் பெரும் நம்பிக்கைத் துரோகம். ஆகவே கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளப் போகிறோம். கட்சிக்காக தாம் வழங்கிய வாக்குகளை திருப்பித் தர கோரப் போகிறோம். உங்களுக்கு (மணிவண்ணனுக்கு) வந்த வாக்குகளை விலக்கினால் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றிருக்காது. உங்களை வைத்து எங்கள் வாக்குகளால் வெற்றியீட்டி அவர்கள் எப்படி பாராளூமன்றம் செல்வர். என ஆவேசமாக, உணர்ச்சிவசப்பட்டவர்களாக சத்தம் போட்டனர்.

அப்போது குறுக்கிட்ட மணிவண்ணன், நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் நன்றி. அவசரப்பட வேண்டாம். இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உத்தியோக பூர்வ கடிதம் இன்னமும் எனக்கு வரவில்லை. அது கிடைத்த வுடன் ஊடகர் மத்தியில் எனது தரப்பு விளக்கத்தையும், முடிவையும் அறிவிப்பேன்.

அதன் பின் கட்சித் தலைமையிடம் இருந்து வரும் பதிலை வைத்து என்ன செய்வது என முடிவெடுக்கலாம். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கேடுக்கொண்டார்.

மணிவண்ணன் தொடர்பான பிசர்ரனை தேர்தலுக்கு முன் ஒரு மாதத்திற்கும் மேலாகவே இருந்து வந்த போதும் அந்த உடனும் நடவடிக்கை எடுத்து மணிவண்ணனை நீக்காது தேர்தல் முடிவின் பின் நீக்கியிருப்பது கட்சியின் தலைவரும், செயலாளரும் இணைந்து போட்ட சதித்திட்டம் என்றே கூறப்படுகிறது. கடந்த முறைத் தேர்தலில் பின்னடைவை சந்தித்து கட்டுப்பணத்தை இழந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இத் தேர்தலில் எவ்வாறாயினும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி மணிவண்ணனை வைத்து மக்கள் வாக்குகளை பெற்று கட்சியியின் வெற்றியை உறுதி செய்த பின் தற்போது மணிவண்ணனை நீக்கியிருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த இரு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் இன்று மணிவண்ணன் கையில் கட்சியின் கடிதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்று இரவு அல்லது நாளை மணிவண்ணன் ஊடகர் மத்தியில் தனது விளக்கத்தையும், முடிவையும் அறிவிப்பார் என நம்பப்படுகிறது.