Home செய்திகள் முதல் பெண் கடற் கரும்புலி “கப்டன் அங்கயற்கண்ணி” யின் 26ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

முதல் பெண் கடற் கரும்புலி “கப்டன் அங்கயற்கண்ணி” யின் 26ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

130
0

யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்திற்குள் 16.08.1994 அன்று ஊடுருவி அங்கு தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கண்காணிப்புக் கப்பலான A516 உட்பட 2 டோறா விசைப்படகுகளையும் தகர்த்த முதல் பெண் கடற் கரும்புலியான கப்டன் அங்கயற்கண்ணி இன் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஈழ தமிழர் வரலாற்றில் புதிய வரலாறு எழுதி பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்து முதல் பெண் கடற் கரும்பலியாக கப்டன் அங்கயற்கண்ணி வீரகாவியமாகியிருந்தார்.

இலங்கைத் தீவில் தொடர் இன்னல்களுக்க்உம், அடக்குமுறைகளுக்கும் மத்தியில் வாழ்ந்துவரும் தமிழர்களின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமும், அவர்களின் வீரம் செறிந்த போராட்டமும், உயரிய தியாகங்களும் மக்களால் மறக்கமுடியாதவை.

அந்த வகையில் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி இன் நினைவு நாளான இன்று சமகால நிலைமையை கருத்தில் கொண்டு அமைதியான முறையில் பல இடங்களில் நினைவு கூரப்பட்டு வருவதோடு சமூக வலைத்தளங்களில் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணிக்கு நினைவு கூரப்பட்டு வருவதை காணமுடிகிறது.