Home செய்திகள் அம்பாறையில் கிராமத்திற்குள் புகுந்த 40 க்கும் மேற்பட்ட யானைகள்:

அம்பாறையில் கிராமத்திற்குள் புகுந்த 40 க்கும் மேற்பட்ட யானைகள்:

35
0

அம்பாறை மாவட்டம் வீரச்சோலை காட்டின் ஊடாக கிட்டங்கி ,சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, எல்லையை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 40க்கும் அதிகளவான யானைகளால் அப்பகுதியில் அச்சமும், பெரும் பதற்றம் நிலவியது.

இன்று (15) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றிய வனவிலங்கு அதிகாரிகள் யானைகள் மீண்டும் காடுகளுக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக இப்பகுதியில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான யானைகள் இப்பகுதியில் வருகை தந்த வண்ணம் உள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.