
யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் சுழிபுரம் விக்டோறியா கல்லூரியில் கலைப்பிரிவில் பயின்றுவரும் 19 வயதுடைய குணரத்தினம் விமலவர்ணா எனவும், அவர் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்துவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இது கொலையாகவும் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.