Home தாயக செய்திகள் வடக்கில் நினைவு கூரப்பட்ட செஞ்சோலை படுகொலை நினைவு நிகழ்வு!

வடக்கில் நினைவு கூரப்பட்ட செஞ்சோலை படுகொலை நினைவு நிகழ்வு!

86
0

சிறீலங்காவின் குண்டுவீச்சு விமானம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சு தாக்குதலில் கொல்லப்பட 54 செஞ்சோலை மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வடக்கு, உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் செஞ்சோலையில் வளாகத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் தடை விதித்திருந்த போதும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினரான சிவாஜிலிங்கம் தலைமையில் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவர்களின் நினைந்துருகி உறவினர்களால் கட்டங்கட்டமாக சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

பொலிஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் – இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று காலை செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் செயலாளர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.