
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், மஹிந்த குளாமின் அரசில ஆலோசகருமானா பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (13/08) வியாழக்கிழமை பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சு அலுவலகத்தில் தனது கடமைகளைப் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற பின் கருத்து தெரிவிக்கையில்…
நாட்டின் பிரதான வளமான ஆளணி வளத்தை உயர்ந்தபட்ச அளவில் மேம்படுத்துவதன் மூலமே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். இது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, வாழ்வாதார வழிகாட்டல் என்பனவற்றிற்கு இடையே தொடர்புகளை பேணுவது அவசியமாகும். அந்த வகையில் கல்வி முறமையில் சில மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதோடு பல புதிய வழிமுறைகளை கையாள உள்ளதாகவும் என்று குறிப்பிட்டார்.
இலங்கை சுதந்திரமடைய முன்னரும், பின்னரும் ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாக்கின.
ப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட அதிக விழுக்காடு தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர். இதை சீர் அற்ற ஒரு நிலையாக கருதிய சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தார்கள். இந்த சட்டங்கள் 1967, 1971, 1979 ஆண்டுகளில் மாற்றப்பட்டன.
சிங்கள பெளத்த பேரினவாதியும், கடும் போக்காளருமான ஜி.எஸ்.பீரிஸ் கல்வி அமைச்சராக தற்போது பதவி ஏற்றிருப்பது மீண்டும் புதிய வடிவங்களில் தமிழர்களின் கல்விக்கு தடையை ஏற்படுத்தி, சிறந்த தொழில்களில் பணிபுரியும் வாய்ப்புக்களை குறைக்கும் திட்டமாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.