Home உலக செய்திகள் ரஷ்யாவின் தடுப்பூசியை மதிப்பாய்வு செய்த பின்னரே “முன் தகுதி” சான்று:

ரஷ்யாவின் தடுப்பூசியை மதிப்பாய்வு செய்த பின்னரே “முன் தகுதி” சான்று:

115
0

உலகையே உலுக்கி பல இலட்சம் உயிர்களை பலிகொண்டுள்ள Covid-19 வைரஸினால் ஏற்படும் கொரோனா நோய்க்குரிய தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதோடு அதற்கு தடுப்பூசிக்கு ’ஸ்புட்னிக் -வி’ என பெயரிடப்பட்டுமுள்ளது.

இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆற்றல் மிக்க “தடுப்பூசி” என சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுமுள்ளது.

இது பாதுகாப்பானது எனவும், இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகி மிகவும் திறம்பட செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்…

“ ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடை முறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்” என்றார்.