Home தாயக செய்திகள் யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அங்கஜனும், டக்ளசும் நியமனம்:

யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அங்கஜனும், டக்ளசும் நியமனம்:

45
0

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதனும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக டக்ளஸ் தேவாநந்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக கே. திலீபனும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி தலதாமாளிகையில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சர்களுக்கான பதவி பிரமான நிகழ்வின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளன.