Home தாயக செய்திகள் மீண்டும் கடற்தொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா:

மீண்டும் கடற்தொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா:

51
0

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இன்று (12/08)பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர். 

கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் இன்று இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் இருவரும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு 32,146 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றிருந்த டக்ளஸ் தேவானந்தா “கடற்றொழில் அமைச்சராக” பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். 

இவர் கடந்த இடைக்கால அரசாங்கத்திலும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி “நீதி அமைச்சராக” பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். 

இதுவரை வழங்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம்:

அமைச்சர்கள் விபரம்:

  • 1. கோத்தாபய ராஜபக்ச – பாதுகாப்பு.
  • 2. மஹிந்த ராஜபக்ச – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம், கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு.
  • 3. நிமால் சிறிபால – தொழில்.
  • 4. ஜி.எல்.பீரிஸ் – கல்வி.
  • 5. பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சர்.
  • 6. தினேஷ் குணவர்த்தன – வெளிநாட்டு அலுவல்கள்.
  • 7. டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில்.
  • 8. காமினி லொக்குகே – போக்குவரத்து.
  • 9. பந்துல குணவர்த்தன – வர்த்தகம்.
  • 10. சிபி.ரத்நாயக்க – வனஜீவராசிகள், வன பாதுகாப்பு.
  • 11. ஜனகபண்டார தென்னக்கோன் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்.
  • 12. ஹெஹெலிய ரம்புக்வெல்ல – வெகுசன ஊடகம்.
  • 13. சமல் ராஜபக்ச – நீர்பாசனம்.
  • 14. டலஸ் அழகப்பெரும – மின்சக்தி.
  • 15. ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள்.
  • 16. விமல் வீரவன்ச – கைத்தொழில்.
  • 17. மஹிந்த அமரவீர – சுற்றாடல் துறை.
  • 18. எஸ்.எம்.சந்திரசேன – காணி.
  • 19. மஹிந்தானந்த அளுத்கமகே – கமத்தொழில்.
  • 20. வாசுதேவ நாணயக்கார நீர்வழங்கல்.
  • 21. உதய கம்மன்பில – எரிசக்தி.
  • 22. ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டம்.
  • 23. பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத் துறை.
  • 24. ரோஹித அபேகுணவர்த்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை.
  • 25. நாமல் ராஜபக்ச – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை.
  • 26. அலி சப்ரி – நீதி.

இராஜாங்க அமைச்சர்கள்:

  • 1. சமல் ராஜபக்ச – உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்.
  • 2. பிரியஙங்கர ஜயரத்ன – வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை.
  • 3. துமிந்த திஸாநாயக்க – சூரியசக்தி, காற்று மற்றும் நீர்சக்தி உற்பத்தி கருத்திட்டம்.
  • 4. தயாசிறி ஜயசேகர – கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி.
  • 5. லசந்த அழகியவன்ன – கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு.
  • 6. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு.
  • 7. அருந்திக பெர்னாண்டோ – தெங்கு, கித்துல், பனை, இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி – ஏற்றுமதி வகைப்படுத்தல்.
  • 8. நிமல் லான்ச – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு வசதிகள்.
  • 9. ஜயந்த சமரவீர – குத வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை.
  • 10. ரொஷான் ரனசிங்க – காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி.
  • 11.கானக ஹேரத் – கம்பனி தோட்டங்கள் சீர்திருத்தல் மற்றும் தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் – ஏற்றுமதி மேம்பாடு.
  • 12. விதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பகலைகள் மேம்பாடு.
  • 13. ஜானுக வகும்புர – கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு.
  • 14. விஜித பேருகொட – அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழகம்.
  • 15. ஷெஹான் சேமசிங்க – சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி.
  • 16. மொஹான் சில்வா – உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை.
  • 17. லொஹான் ரத்வத்த – இரத்தினக்கல், தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில்.
  • 18. திலும் அமுனுகம – வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்.
  • 19. விமலவீர திஸாநாயக்க – வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை.
  • 20. தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கை.
  • 21. இந்திக அனுருத்த – கிராமிய வீடமைப்பு, நிர்மானத்துறை, கட்டிடப்பொருட்கள் மற்றும் கைத்தொழில்.
  • 22. காஞ்சன விஜசேகர – அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி.
  • 23. சனத் நிஷாந்த – கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்டம்.
  • 24. சிறிபால கம்லத் – மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதி.
  • 25. சரத் வீரசேகர – மாகாணா சபைகள் மற்றும் உள்ளூராட்சி.
  • 26. அனுராத ஜயரத் – கிராமிய வயல் நிலங்கள் – அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி.
  • 27. வியாழேந்திரன் – தபால் சேவைகள், வெகுசன ஊடக மற்றும் தொழில் அபிவிருத்தி.
  • 28. தேனுக விதானகமகே – கிராமிய மற்றும் பாடசாலைகள் விளையாட்டு உட்கட்டமைப்பு.
  • 29. சிசிற ஜயகொட – சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய – ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதாரம்.
  • 30. பியல் நிசாந்த – மகளிர் – சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள்.
  • 31. பிரசன்ன ரனவீர – பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாடு.
  • 32. டி.பி.ஷானக – விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி.
  • 33. டி.பி.ஹேரத் – கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்.
  • 34. ஜீவன் தொண்டமான் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்.
  • 35. சஷிந்திர ராஜபக்ச – நெல் – தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் – உ.கிழங்கு செய்கை மேம்பாடு – விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம்.
  • 36. நாலக கொடகேவா – நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவகற்றல் மற்றும் சமூதாய தூய்மைப்படுத்தல்.
  • 37. அஜித் நிவாட் – நிதி, மூலதன சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு.
  • 38. சீதா அரம்பொல – திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம்.
  • 39. சன்ன ஜயசுமன – ஔடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்.