Home தாயக செய்திகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது நாட்டின் சிவில் நிர்வாகம்!

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது நாட்டின் சிவில் நிர்வாகம்!

21
0

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை உள்ளடக்கி சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகள் ஒரு நாட்டின் சிவில் நிர்வாகங்களுடனேயே தொடர்பினை பேண விரும்பும் நிலையில் அந்தநிலை தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்த்து முழுமையாக இராணூவ கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் திட்டமாகவே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ கையாண்டுள்ளார்.