Home செய்திகள் வவுனியாவில் – பேரூந்து மோதி முதியவர் பலி!

வவுனியாவில் – பேரூந்து மோதி முதியவர் பலி!

42
0

வவுனியா – பேரூந்து தரிப்பு நிலையத்தில் நின்ற முதியவரை பேரூந்து ஒன்று மோதியதில் முதியவர் பலியாகியுள்ளார்.

வவுனியா – பேரூந்து தரிப்பு நிலையத்தில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோசாலைக்கு சொந்தமான பேரூந்து பின்னோக்கி நகர்த்தப்பட்ட போது அதன் பின்னால் நின்றிருந்த முதியவர் மீது மோதியது.

இதனையடுத்து படுகாயமடைந்த முதியவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.