Home செய்திகள் மயிலிட்டி கொட்டுப்புலம் இந்து மயானம் புனரமைப்பு:

மயிலிட்டி கொட்டுப்புலம் இந்து மயானம் புனரமைப்பு:

46
0

யாழ்-வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் மயிலிட்டி கொட்டுப்புலம் இந்து மயானம் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் அனுசரணையில் புனரமைக்கப்பட்டுள்ளது.

குறித்த மயானத்திற்கான புதிய கிணறு ஒன்றை திருப்பூர் ஒன்றியம்- சுவீட்சார்லாந்து கிளையைச் சேர்ந்த திரு. இராமசாமி இன்பராசா குடும்பத்தினரினால் அமரர் இராமசாமி செல்லக்கிளி அவர்களால் கட்டப்பட்டு கடந்த 2020.08.08 (சனிக்கிழமை) அன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு மயிலிட்டி கொட்டுப்புலம் இந்துமயான பகுதி முழுவதும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் சமநிலைப்படுத்தப்பட்டு பயன்தரு மரங்களும் பூ மரங்களும் நடப்பட்டு அன்றைய தினம் அழகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.