Home உலக செய்திகள் பெய்ரூட் அழிவின் எதிரொலி – சென்னையில் இருந்து அகற்றப்படும் 740 தொன் அமோனியம்...

பெய்ரூட் அழிவின் எதிரொலி – சென்னையில் இருந்து அகற்றப்படும் 740 தொன் அமோனியம் நைட்ரேட்!

45
0

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, மணலி கிடங்கில் இருந்த 740 தொன் அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இன்று (09/08) ஞாயிற்றுக்கிழமை 10 கென்டெய்னர்கள் மூலம் 200 தொன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியாவில் இருந்து சென்னைக்கு 37 கென்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்ட 740 தொன் அமோனியம் நைட்ரேட் ஏ இப்போது சென்னையில் இருந்து பாதுகாப்பு கருதி இவ்வாறு அப்புறப்படுத்தப்படுகிறது.

சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறையின் சில சட்டப் பிரச்சினைகள் காரணமாக மணலியில் உள்ள சரக்கு கென்டெய்னர் முனையத்தில் இவை இவ்வளவுகாலமாக வைக்கப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில் லெபனான் அனுபவத்தைக் கொண்டு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், நேற்று முன்தினம் அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அங்கிருந்து அகற்றவேண்டும் என சுங்கத்துறைக்கு பரிந்துரைத்ததன் அடிப்படையில், அமோனியம் நைட்ரேட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.