Home செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு தெரிவானார் கஜேந்திரன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு தெரிவானார் கஜேந்திரன்!

48
0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

இம்முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மணிவண்ணன் மற்றும் சுகாஸ் ஆகியோரில் ஒருவரே தெரிவாவர் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அக் கட்சியில் போட்டியிட்ட பெண் ஒருவருக்கு தேசியப்பட்டியலில் வாய்ப்பை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

அதேவேளை கிளிநொச்சியையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஏற்கனவே ஒருவர் தெரிவான நிலையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய “வன்னி” மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றவருக்கே தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் வன்னித்தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் தமிழ் பிரதிநிதித்துவம் அற்ற கிழக்கில் ஒருவருக்கு இந்த வாய்பு வழங்கப்பட்டு அங்கு தமிழ் பிரதிநிதித்துவத்த்ஐயும், தமிழர்களின் உரிமையையும் நிலைனாட்ட வேண்டும் எனவும் ஆதரவாளர்களால் தெரிவிக்கப்பட்டும் வந்தது.

இருப்பினும் இவை அனைத்தையும் தட்டிக்கழித்து அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளராக கட்சியின் செயலாளரின் பெயரை தற்போது அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்க காலத்தில் இருந்து இன்றுவரை அர்ப்பணிப்போடு செல்வராஜா கஜேந்திரந் செயற்பட்டு வருபவர். அவ்வாறான ஒருவருக்கு தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கப்பட்ட்அ விடையம் பிழை இல்லை என்றாலும் அக் கட்சியின் வளர்ச்சியில் உறுதுணையாக நின்று மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்று அதிக வாக்குகளையும் பெற்ற நபர்களை புறம்தள்ளியுள்ளமையானது கட்சிக்குள் விரிசல்களை ஏற்படுத்தி பிளவடைய செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.