Home செய்திகள் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை: சஜித்

தோல்வி அடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை: சஜித்

40
0

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிக்கப்படாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (08/08) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் ஆவர் கூறுகையில்,

“நாடாளுமன்றில் 54 ஆசனங்களை பெற்றுக் கொடுத்த 27 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

தேர்தலில் பின்னடவை சந்தித்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்க போதவதில்லை என கட்சியின் கொள்கை பிரகடனத்தில் முன்னரே அறிவிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை. மக்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளதாக உணர்கிறேன்.

எனவே தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிக்கப்படாது.” அதே வேளை தேசியப்பட்டியலுக்கு தெரிவான பெயர் விபரம் நாளை மறுதினம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்றார்.