Home செய்திகள் சசிகலாவிற்கு நீதி வேண்டி சாவகச்சேரியில் போராட்டம்!

சசிகலாவிற்கு நீதி வேண்டி சாவகச்சேரியில் போராட்டம்!

72
0

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று (08/08) காலை முதல் போராட்டத்தில் மக்கள் இறங்கியுள்ளனர்.

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள சசிகலாவின் கணவரான மாமனிதர் ரவிராஜின் உருவ சிலைக்கு கீழ் குறித்த போராட்டம் சசிகலாவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதே வேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவைர் மாவை சேனாதிராஜாவை அவரது இல்லத்தில் சசிகலா நேறில் சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலையின் முகப்பகுதி நேற்று காலை முதல் கறுப்பு நிற துணியால் மூடப்பட்டு காட்சியளிக்கிறது.