Home செய்திகள் வரலாற்று தோல்வியை சந்தித்தார் ரணில்!

வரலாற்று தோல்வியை சந்தித்தார் ரணில்!

58
0

1948 இன் பின்னரான இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி.

ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டு வந்த கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இம்முறை எந்த ஆசனங்களும் இன்றி படு தோல்வியடைந்துள்ளது.

அக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க உட்பட அக்கட்சியைச் சேர்ந்த எவரும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், அண்மைக் காலங்களில் உருவாக்கம் பெற்ற இரு கட்சிகள் பெரு விருட்சமாக மாறி முதல் இரண்டு நிலைகளையும் கைப்பற்றி உள்ளமையானது இலங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.