Home தாயக செய்திகள் சர்ச்சைக்குரிய யாழ் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்:

சர்ச்சைக்குரிய யாழ் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்:

55
0

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் யாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ் மாவட்டதில் அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகளையும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள், எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் டக்ளஸ் தேவனந்தா – 32,146 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகளையும், மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 3 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவை தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா முன்னர் வெற்றி பெற்றதாகவும், இரண்டாம் இடத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சுமந்திரனின் தலையீட்டால் அவை தலைகீழாக மாறி சசிகலா வெற்றி பெறவில்லை எனவும், அந்த இடத்தில் சுமந்திரன் பெயர் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட குழப்ப சூழலில் அங்கு கூடியிருந்தவர்கள் மீது பொலீஸ் அதிரடிப்படையினர் தாக்குதல் மேற்கொண்டதோடு அங்கிருந்து அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்போடு எம்.ஏ.சுமந்திரன் சிரித்த முகத்தோடு அங்கிருந்து வெளியேறினார்.