
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் ஆளும் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 6,853,693 வாக்குகளை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் பாராளுமன்றத்தின் 145 ஆசனங்களை தனதாக்கியுள்ளது சிறீலங்கா பொதுஜன பெரமுன.
2,771,984 வாக்குகளை பெற்று 54 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி.
ஆசன அடிப்படையில், மூன்றாம் நிலையில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி 327,168 வாக்குகளை பெற்று 10 ஆசனங்களை பெற்றுள்ளது.
பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி பெற்று ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகளின் முழு விபரம் பின்வருமாறு:
