
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய “வன்னி” தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
வவுநியா மாவட்டத்தில் 22,849 வாக்குகள், மன்னாரில் 20,266 வாக்குகள், முல்லைத்தீவில் 22,492 வாக்குகள் என மொத்தமாக வன்னித் தேற்தல் தொகுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சி 65,607 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.
விகித அடிப்படையில் நோக்கினால்…
- இலங்கை தமிழ் அரசு கட்சி – 34.48%
- பொதுஜன பெரமுன – 20.63%
- ஐக்கிய மக்கள் சக்தி – 16.62%
பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
காலா காலமாக தமிழர்களின் பலத்தை நிலை நாட்டிவந்த வடக்கில் இம்முறை பெரும்பான்மை கட்சிகள் அதிக வாக்குகளை பெற்றுள்ளமை இலங்கை வாழ் தமிழ் மக்களை மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களஇயும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.