Home தாயக செய்திகள் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலையில்!

யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலையில்!

132
0

யாழ்மாவட்டத்தின் 6 தேர்தல் தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலையில் உள்ளது.

இதுவரை வெளியான வாக்கு விபரங்களின் அடிப்படையில், காங்கேசன்துறை தொகுதியில் 6849 வாக்குகளும், கோப்பாய் தொகுதியில் 9365 வாக்குகளும், சாவகச்சேரி தொகுதியில் 8931 வாக்குகளும், பருத்தித்துறை தொகுதியில் 5803 வாக்குகளும், வட்டுக்கோட்டை தொகுதியில் 9024 வாக்குகளும், நல்லூர் தொகுதியில் 8423 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி உள்ளது.

இரண்டாம் இடத்தில் அங்கயனின் (கை சின்னம்) கட்சியும், மூன்றாம் இடத்தில் கஜேந்திரகுமாரின் (சைக்கிள் சின்னம்) கட்சியும் உள்ளன.

அடுத்த அடுத்த இடங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.