Home தாயக செய்திகள் மூதூரில் – அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் அணி முன்னிலையில்:

மூதூரில் – அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் அணி முன்னிலையில்:

82
0

திருகோணமலை மாவட்டம் – மூதூர் தேர்தல் தொகுதியை பல மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் அணியின் “ஐக்கிய மக்கள் சக்தி கட்சி” முன்னிலையில் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 51330 வாக்குகளை பெற்று முதல் இடத்திலும், பொதுஜன பெரமுன 11085 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திலும், இலங்கை தமிழரசுக் கட்சி 9502 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தமிழர்களின் பூர்வீக நிலமாக இருந்த நிலப்பரப்பு இன்று கைவிட்டுச் செல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கோட்டையாக கருதப்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதேசம் முதல் இரண்டு அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளதென்பது இலங்கை தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.