Home செய்திகள் மட்டு – கல்குடாவை கைப்பற்றியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி!

மட்டு – கல்குடாவை கைப்பற்றியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி!

127
0

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் “கல்குடா” தேர்தல் தொகுதியில் 20622 வாக்குகள் பெற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முன்னிலையில் உள்ளது.

அடுத்த நிலைகளில், 17312 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசுக் கட்சி இரண்டாம் நிலையிலும், 15394 வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாம் நிலையிலும் உள்ளன.

இதேவேளை, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் 12064 வாக்குகளை பெற்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் பிரதேசங்கள் உட்பட பரவலாக அதிக வாக்குகளை பெற்று வரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே இம்முறை எதிர்க்கட்சிய்ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.