Home செய்திகள் புத்தளத்தில் கடும் காற்றுடன் மழை – 88 வீடுகள் சேதம்!

புத்தளத்தில் கடும் காற்றுடன் மழை – 88 வீடுகள் சேதம்!

32
0

புத்தளம் மாவட்டத்தில் நேற்று (05/08) புதன் கிழமை இரவு கடும் காற்றுடன் பெய்த மழை காரணமாக 88 வீடுகள் சேதமடைந்துள்ளன.

முந்தல், கருவலகஸ்வெல, வண்ணாத்திவில்லு, நாத்தாண்டி, பள்ளம ஆகிய பிரதேசங்களே இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

இவற்றுள் முந்தல் பிரதேஸமே அதிக பாதிப்படைந்துள்ளது. அப்பிரதேசத்தில் மட்டும் பாடசாலை உள்ளிட்ட 61 வீடுகள் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த அனர்த்தம் காரணமாக ஐந்து பிரதேசங்களையும் சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.