Home தாயக செய்திகள் நாடளாவிய ரீதியில் வெளியான இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள்:(Latest Update)

நாடளாவிய ரீதியில் வெளியான இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள்:(Latest Update)

100
0

இலங்கையில் நேற்றைய தினம் (05/08) இடம்பெற்ற நாடாளுமன்றிற்கான தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்றைய தினம் (06/08) காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் இலங்கை நேறம் மாலை 7:00 மணி வரை வெளியான விபரங்கள் இதோ…

ஆளும் கட்சியான “பொதுஜன பெரமுன கட்சி” 2188100 (66%) வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றது.

இதே வேளை 664868 வாக்குகளை பெற்று “ஐக்கிய மக்கள் சக்தி” இரண்டாம் இடத்திலும், தேசிய மக்கள் சக்தி 158625 வாக்குகளை பெற்று மூன்றாம் நிலையிலும், 95067 வாக்குகளை பெற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி நான்காம் இடத்தையும் எட்டியுள்ளன.

வழமைக்கு மாறாக இலங்கையின் மிகப்பெரும் பழமையான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இதுவரை 67323 வாக்குகளை மட்டுமே பெற்று ஐந்தாம் இடத்திறு தள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.