
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.
நாடளாவிய ரீயில் 22 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்ட 7452 வேபாளர்களில் 196 உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்புவதற்காக நடைபெற்ற இம்முறை தேர்தலின் போது 12,985 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
வடமாகாணத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களையும் இம்முறை இரண்டு தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றமையால் வடமாகாண பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணூம் பணிகள் நாளை (06/08) காலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் வாக்களிப்பு நிறைவுபெற்று தற்போது பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
ஆகக்கூடிய வாக்குப் பதிவு நுவரேலியா (70%) தேர்தல் தொகுதியிலும், ஆகக் குறைந்த வாக்குப்பதிவு மொனராகல (35%) தேர்தல் தொகுதியிலும் பதிவாகியுள்ளது.
இந்றைய தேர்தலின் போது 69,000 பொலிஸாரும், 10,500 சிவில் பாதுகாப்பு ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்த பட்டிருந்ததாக தேற்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தொகுதி வாரியாக பாராளுமன்றம் செல்ல உள்ளோர் எண்ணிக்கை: ——————————————————————
திருகோணமலை மாவட்டத்தில் 04,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 05,
பொலன்னறுவை மாவட்டத்தில் 05,
மாத்தளை மாவட்டத்தில் 05,
மொனராகலை மாவட்டத்தில் 06,
வன்னி மாவட்டத்தில் 06,
யாழ். மாவட்டத்தில் 07,
மாத்தறை மாவட்டத்தில் 07,
ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07,
திகாமடுல்ல மாவட்டத்தில் 07,
நுவரெலியா மாவட்டத்தில் 08,
புத்தளம் மாவட்டத்தில் 08,
பதுளை மாவட்டத்தில் 09,
காலி மாவட்டத்தில் 09,
அனுராதபுரம் மாவட்டத்தில் 09,
கேகாலை மாவட்டத்தில் 09
களுத்துறை மாவட்டத்தில் 10,
இரத்தினபுரியில் 11,
கண்டி மாவட்டத்தில் 12,
குருநாகல் மாவட்டத்தில் 15,
கம்பஹா மாவட்டத்தில் 18,
கொழும்பு மாவட்டத்தில் 19
பேர், என 196 உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்ல தெரிவு செய்யப்படவுள்ளனர்.