Home செய்திகள் யாழ் மாவட்டத்தில் அதிகளவானோர் வாக்களிப்பு – அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை: மகேசன்

யாழ் மாவட்டத்தில் அதிகளவானோர் வாக்களிப்பு – அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை: மகேசன்

40
0

எந்தவித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் இன்றைய தேர்தல் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான க.மகேசன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… 

வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. எந்தவித அசம்பாவிதமுமின்றி தேர்தலானது எந்தவித வன்முறைச் சம்பவங்களும் இன்றி மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. 

வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. நாளை காலை வாக்குகள் எண்ணூம் பணி ஆரம்பிக்கும்.

அத்தோடு கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது இம்முறை அதிகளவான வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.