Home செய்திகள் இலங்கை பொதுத் தேர்தல் ஆரம்பம் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு:

இலங்கை பொதுத் தேர்தல் ஆரம்பம் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு:

64
0

இலங்கையின் பொதுத் தேர்தல் இன்று (05/08) காலை 7:00 மணி முதல் நாடளாவிய ரீயில் ஆரம்பமாகியுள்ளது.

வடக்கில் காலையிலேயே மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வரிசையாக வாக்களிப்பு நிலையங்களில் நிற்பதை காணமுடிந்தது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அதிக கட்சிகளும், அதிக வேபாளர்களும் பங்கு கொள்ளும் தேர்தல் இதுவென்பதால் வாக்களிப்பிலும் வழமைக்கு மாறாக அதிகளவான வாக்காளர்கள் தமது வாக்குகளை தமது தெரிவுக்குரியவர்களுக்கு வழங்குவதில் முன்னிற்பதை அவதானிக்க முடிகிறது.

இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமான வாக்கு பதிவுகள் அனைத்தும் இன்று மாலை 5:00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுத் தேர்தலில் தற்போது வரை (முற்பகல் 10.00 மணிவரை) கொழும்பில் 27 சதவீத வாக்குகளும், களுத்துறையில் 20 சதவீத வாக்குகளும், மாத்தளையில் 25 சதவீத வாக்குகளும், கேகாலை 25 சதவீதம், திருகோணமலை 30 சதவீதம் மற்றும் இரத்தினபுரியில் 24 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.