Home செய்திகள் வாக்களிப்பை புறக்கணிக்காது, மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்: யாழ் ஆயர்

வாக்களிப்பை புறக்கணிக்காது, மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்: யாழ் ஆயர்

73
0

தமது நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கள் என யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

வாக்களிப்பைப் எக் காரணத்திற்காகவும் புறக்கணியாதீர்கள். கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விடவேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும். பிழையாக வாக்களிக்காது பதட்டமின்றி சரியான விதமாக வாக்களியுங்கள்.

அதே வேளை, தமது நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களை தெரிவு செய்து வாக்களியுங்கள்.

தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு இத்தேர்தல் முடிவுகள் வழிவகுக்க இறையாசீர் வேண்டுகிறோம். யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை ஒவ்வொருவரும் எவரது தலையீடோ தூண்டுதலோ இன்றி சுயமாகவும் சுதந்திரமாகவும் எடுக்கவேண்டும்.

சுகாதார அறிவுறுத்தற்படி முகக்கவசங்களை அணிந்து நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று சமூக இடைவெளியைப் பேணி வாக்களித்து விட்டு விரைவாக வீடுகளுக்குச் செல்லுங்கள். வாக்களிப்பு நிலையங்களில் பணிபுரிவோர் சிறப்பாக இவற்றைக் கவனித்து வேகமாகச் செயலாற்றுங்கள் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.