Home தாயக செய்திகள் வாக்களிப்பது எப்படி…? தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்:

வாக்களிப்பது எப்படி…? தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்:

72
0

வழமைக்கு மாறாக இம்முறை தேர்தலில் அதிக கட்சிகள் உள்ளடங்கி இருப்பதாலும், வாஅக்குச் சீட்டின் அளவும் பல மடங்கு நீளம் அதிகதிதிருப்பதாலும் மக்களுக்கு “வாக்களிப்பது எப்படி” என்பது தொடர்பான விளக்கத்தை தேர்தல் ஆணையகம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

வாக்குச் சீட்டில் கட்சிகள் , சின்னங்களுக்கு நேராகவுள்ள பெட்டியினுள் புள்ளடியை தவிர வேறு எதனையும் எழுதவோ வேறு அடையாளத்தை இடவோ கூடாது. அத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகளை இட்டால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும்.

ஆகவே, வாக்குச் சீட்டில் நீங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்திற்கு நேராகவுள்ள சிறிய பெட்டிக்குள் புள்ளடி ஒன்றை இட வேண்டும்.

அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கை வழங்க விரும்பினால் கட்சிகள் , சுயேச்சைக்குழுக்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு கீழ் பகுதியில் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களின் மேல் புள்ளடியிட முடியும். மூன்று வேட்பாளர்களுக்கு மாத்திரமே உங்களின் விருப்பு வாக்குகளை வழங்க முடியும்.

இதன்படி ஒரு வேட்பாளரின் இலக்கத்தின் மீதோ அல்லது இரண்டு வேட்பாளர்களின் இலக்கங்களின் மீதோ அல்லது மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களின் மீதோ புள்ளடி இட்டு விருப்பு வாக்கை பதிவு செய்ய முடியும். என தெரிவித்துள்ளது.