Home செய்திகள் வவுனியாவில் – பிரபா கணேசன் அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்:

வவுனியாவில் – பிரபா கணேசன் அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்:

42
0

பிரபா கணேசனின் – ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (01) நள்ளிரவு 12.20 மணியளவில் குறித்த அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்பட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.