Home முக்கிய செய்திகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது தேர்தல் பிரச்சாரங்கள்:

இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது தேர்தல் பிரச்சாரங்கள்:

42
0

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று (02/08) நள்ளிரவுடன் நிறைவடைய உள்ள நிலையில், பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவது, வீடு வீடாகச் செல்வது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, விளம்பர பலகைகளைக் காண்பிப்பது, சுவரொட்டிகளைக் காண்பிப்பது, தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டாம் என்றும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஆகவே, இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

இதேவேளை, முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலில் இடம்பெற்ற வன்முறையின் அளவு குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.