Home செய்திகள் வசாவிளான் மத்திய கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி திடீர் மரணம்!

வசாவிளான் மத்திய கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி திடீர் மரணம்!

53
0

வசாவிளான் மத்திய கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி திடீர் மரணம் அடைந்துள்ளமை பாடசாலை ஆசிரியர், மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கல்வியிலும், பழக்க வழக்கங்களிலும் சிறந்து விளங்கிய ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் லக்சிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சிறுநீரகம் செயலிழந்த நிலையில் அடுத்த மாதம் குறித்த மாணவிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதெனத் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மாணவிக்கு கடந்த சனிக்கிழமை திடீரென இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவிக்கு இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்து மாணவிக்கு மூளை நரம்பு வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(28/07) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்படி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.