
தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி கொண்டு வருகின்ற நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்க வைக்கலாம் எனும் தேடலில் மக்கள் அதிக நாட்டம் காட்டிவருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவதால் சளி, காய்ச்சல் போன்ற எவ்வித வைரசுக்களும் நம்மை அண்டாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் விட்டமின்-சி முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் இதோ சில தகவல்கள் உங்களுக்காக….
*நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் பாலிபினைல் என்னும் வேதிப்பொருள் அடங்கியுள்ளது.
மேலும் நம் உடல் மற்றும் தோல் நலனுக்கும் இது உதவுகிறது. இதனை நாம் அன்றாட உணவில் ஊறுகாய் வடிவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
*குடைமிளகாயை பயன்படுத்தி பாஸ்தா, பிரைட் ரைஸ், சான்விச் போன்ற பலவிதமான உணவு வகைகளை சமைக்கலாம்.
*தோடம் பழத்தை தினசரி உண்பதன் மூலம் வைட்டமின் சி-யின் அளவை அதிகரித்து உடலுக்கு வலுசேர்க்கிறது.
*கொய்யா பழம் பெரும்பாலும் குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதிகளவில் காணப்படுகிறது. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு அதிகப் பலன் கிடைக்கும்.
*பப்பாளி நம்முடைய எதிர்ப்பு சக்திக்கும், தோல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.
*துரித உணவுகள் உண்பதை தவிர்த்து, எலுமிச்சைச்சாற்றை அன்றாட உணவில் சேர்த்தும் பலன்பெறலாம்.