Home செய்திகள் த.ம.தே.கூ வேட்பாளர் சொத்து விபரம்:

த.ம.தே.கூ வேட்பாளர் சொத்து விபரம்:

64
0

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்களை பார்க்க விரும்புபவர்கள் 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சொத்து விபரங்களை தேர்தலின் பின்னர் முன் அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை ஒருவர் அறிவதன் மூலம், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் அறிய முடியும்.

இதேவேளை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சத வீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.