Home உலக செய்திகள் பிரான்ஸில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தமிழர்!

பிரான்ஸில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தமிழர்!

55
0

பிரான்ஸில் – இலங்கைத் தமிழர் ஒருவர் தலை, முகம், கழுத்து பகுதிகளில் மோசமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்த குறித்த சடலத்தை பொளீஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- தொண்டைமானாற்றைச் சேர்ந்த தியாகராஜா சுதாகரன் (43) என்பவரே இவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கு நெருங்கிய உறவினர்கள் எவரும் பிரான்ஸில் இல்லை எனவும், அவரது மனைவி இலங்கையில் வசிப்பதாகவும் கொல்லப்பட்டவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சுதாகரன் தியாகராஜாவின் சடலம் தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வீட்டு வாடகை தொடர்பில் உரிமையாளருடன் இவருக்கு பிரச்சினை ஏற்பட்டதையடுத்து கடந்த புதன்கிழமை இவர் அங்கிருந்து வீட்டு உரிமையாளர்களால் வெளியேற்றப்பட்ட நிலையில் எங்கு போவது என தெரியாது வீதியில் நின்ற இவரைப் பொறுப்பேற்ற பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், முன்னதாக வீட்டின் உரிமையாளரின் நண்பர்கள் சிலரால் இவர் தாக்கப்பட்டு புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த குறித்த இளைஞனின் சடலம் வியாழக்கிழமை அதே வீட்டில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளரால் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பின், வீடு உரிமையாளரால் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் இவர், மறுநாள் வியாழக்கிழமை எவ்வாறு மீண்டும் அதே வீட்டுக்குச் சென்றார் என்பதும், தற்கொலைக்கான தடையங்கள் இல்லாமல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடையங்களோடு அவர் அங்கு இறந்து இருந்தமையும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.