Home செய்திகள் முற்று முழுதாக பறிபோகும் நிலையில் அம்பாறை: கஜேந்திரகுமார்

முற்று முழுதாக பறிபோகும் நிலையில் அம்பாறை: கஜேந்திரகுமார்

39
0

அம்பாறை மாவட்டம் முற்றும் முழுதாக பறிபோவதற்கான நிலைமை இருக்கின்ற சூழ்நிலையில் தான் இம் மாவட்டத்தில் இந்த தேர்தலை ஏதிர்நோக்கி இருக்கின்றோம்.

இந்த தேர்தலின் பிற்பாடு தமிழ் மக்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எங்கள் அமைப்பை தவிர வேறு எந்த அமைப்பிற்கும் வாக்களித்தாலும் இது தமிழர் தாயக நிலப்பரப்பல்ல சிங்கள பௌத்த மக்களுக்குதான் சொந்தம் என காட்டப்படுவதுடன் தமது உரிமைகளை தாங்களாகவே கைவிடும் நிலைக்கு வந்துவிடுவோம். 

எனவே இதனை எமது தார்மீக கடமையாக விளங்கி கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து 75 வருடங்களாக பாதுகாத்து வரும் உரிமைகளை உயிரோடு வைத்திருக்க எம்மை ஆதரிக்க வேண்டும். 

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.