Home தாயக செய்திகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லை கந்தன் வருடாந்த திருவிழா:

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லை கந்தன் வருடாந்த திருவிழா:

61
0

வரலாற்று சிறப்பு மிக்க அலங்காரக்கந்தனின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று (24) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. 

சுப மூர்த்த 10 மணியளவில் மேளதாள, வாத்தியங்கள் முழங்க, அந்தனர்சிவாச்சாரியர்களின் வேதபாராயணம் ஓத ஆலயபிரதம குரு சிவஸ்ரீ அ.வைகுந்தன் தலைமையில் அலங்காரகந்தனின் மஹோற்சவ கொடியேற்றம் ஏற்றிவைக்கப்பட்டது. 

25 நாட்கள் இடம்பெறும் மஹோற்சவத்தில் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மாலை திருமஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி காலை சூர்யோற்சவம் திருவிழாவும் மாலை கார்த்திகை உற்சவமும், 13 ஆம் திகதி சந்தானகோபாலர் உற்சவமும், 13 திகதி மாலை கைலாசவாகனமும், 14 திகதி மாலை வேல்விமானமும், 15 திகதி தெண்டாயுதபாணி உற்சவம், 15 திகதி மாலை ஒருமுகத்திரு விழாவும், 16 திகதி சம்பரமும், 17 திகதி தேர்த்திருவிழாவும், 18 திகதி அன்று காலை தீர்த் திருவிழாவும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே ஆலயத்தின் மஹோற்சவ நிறைவடையும். 

ஒவ்வொரு பக்தர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கட்டளைக்கு உட்பட்டு  பக்தர்கள், சமூக இடைவெளியினையும் கருத்தில் கொண்டு வழிபாட்டில் ஈடுபவதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் யாழ் மாநகர பொதுச் சுகாதாரப் பணியாளர்களால் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வூட்டும் சமூக செயற்பாட்டில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, யாழ்ப்பாண பொலிஸாரால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் தேசிய அடையாள அட்டை பார்க்கப்பட்ட பின்னரே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுயிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக ஆலய சுற்றுப்பிரகாரம் அன்னதானம், தாக சாந்தி நிலையம், சமய சொற்பொழிவுகள், சிறுவர் பொழுதுபோக்கு நிகழ்வுகள், என்பவை நடாத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்பதும், சுமார் 300 பேருக்கு மட்டுமே ஆலயத்தின்ற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.