Home செய்திகள் காங்கேசன்துறை கடலில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்!

காங்கேசன்துறை கடலில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்!

38
0

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்று கடலில் தவறிவீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்ட 72 வயதுடைய மீனவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த மீனவரை, சக மீனவர்கள் உட்பட கடற்படையினரும் சேர்ந்து இரண்டு நாட்களாக கடலில் தேடிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலை காங்கேசன்துறை கடற்கரையில் அம் மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.